இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் இலங்கைக்குள் நுழையும் புலனாய்வு அதிகாரிகள் (Video)
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகையானது இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நகர்வுகளை மையப்படுத்திய ஒரு விடயமாகும் என இலங்கையின் அரசியல் ஆய்வாளரும் புலனாய்வு செய்தியாளருமான எம். எம். நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது இலங்கையுடனான ஒப்பந்தங்களை மையப்படுத்தியே ஆகும்.
இதில் முக்கியமாக இந்திய - இலங்கை பால விவகாரம், மற்றும் திருகோணமலை துறைமுகம் ஊடக இலங்கைக்குள் எரிவாயுவை கொண்டுவரும் விவகாரம் என்பன கலந்துரையாடப்படவுள்ளன.
இலங்கையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படவுள்ள எந்த ஒரு திட்டத்திற்கும் இதுவரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளாத நிலையில் குறித்த விஜயமானது அதற்கான வழிகளாக பார்க்கப்படுகிறது.
மேலும் வடக்கில் தமது காலூன்றலை மேற்கொள்ள இந்தியா திட்டமிடும் நேரத்தில், அமெரிக்க அதற்கான திட்டங்களை ஜூலி சங் மூலமாக நகர்த்த முனைகிறது." என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட இலங்கை அரசியலின் நகர்வுகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
