விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் புலனாய்வு சேவையுடன் இணைந்த இலங்கையர்கள்
இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் தொடர்பில் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா செல்லவுள்ள குழு
இதன் காரணமாகவே இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவரான சி.குணசேகரன், பூங்கொடி கண்ணா ஆகியோர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹாஜி சலீம் துபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை புத்துயிர் பெற செய்தல்
இந்நிலையில் இவர்களும் சலீமும் இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகளை புத்துயிர் பெறச் செய்ததாக இந்திய புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிம்புலா எலே குணா என்ற சி.குணசேகரன், பூங்கொடி கண்ணா என்ற புஸ்பராஜா, முகமது அஸ்வின், கொட்ட காமினி என்ற சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அதுருகிரிய லடியா, வெல்லே சுரங்கா, மொஹமட் அஸ்மின், திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்ட இலங்கையர்களாவர்.
இந்த ஒன்பது இலங்கையர்களும் தொடர் குற்றங்களுக்காக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
