பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (29.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பிரதமர் குணவர்தன மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர், எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகள், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், தொடருந்து திட்டங்கள் உட்பட்ட போன்ற பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்கள்
மூத்த இந்திய இராஜதந்திரியான ஜா, கொழும்பில் தனது பணியை ஆரம்பிக்கும் முன்னர், ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.
இவர் 2007-2010 வரை கொழும்பின் உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகவும், வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான துறையிலும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில், இந்தியா-இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பின் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அவர் பெரும் பங்கு வகித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கைத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையின் நலனுக்காக, இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே தமது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் அடையாளங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துதல் உள்ளிட்ட டிஜிட்டல் என்ற எண்மான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, இந்தியாவின் நிபுணத்துவம் இலங்கைக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
