இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் (PHOTOS)
முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் 9 ஆம் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் மீனவர்கள் 10 பேரையும் இன்று (23) மாலை முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்து மீனவர்களும் படகுகளுடன் கைது
முல்லைத்தீவு கடற்பரப்பில் நேற்று 22 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் சுற்றிவளைப்பில் பத்து மீனவர்களும் படகுடன் கைது செய்யப்பட்டதாகவும்,கைது செய்யப்படும் போது மீனவர்களுடைய மீன்களை மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை,திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.