யாழில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் : துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயம்
இலங்கைக் (Sri Lanka) கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று (28) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய கடற்தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
தமிழகத்தைச் சேர்ந்த 13 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி கடற்தொழிலில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு கடற்தொழிலாளர்களுக்கு காயம் என்பதால் கடற்தொழிலாளர்கள் அனைவரையும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
