பிரபாகரன் காலத்தில் ஒரு இந்திய மீனவர் கூட கடலில் கொல்லப்படவில்லை
பிரபாகரன் காலத்தில் ஒரு இந்திய மீனவன் கூட கடலில் கொல்லப்படவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்பு கூமார் 300 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் காலத்தில் சீனாவின் போர் கப்பல் எதுவுமே இந்து மா கடல் எல்லையில் நுழைந்தது கிடையாது. புலிகள் இல்லாத இன்றைய நிலையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சாதாரணமாகவே இலங்கை கடற்பரப்பில் நுழைகின்றது'- இவ்வாறு தெரிவிக்கின்றார் கவிஞர் காசி ஆணந்தன்.
ஈழத் தமிழர்களின் அறப்போராட்ட காலத்தில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் பரப்பில் பணியாற்றிய கவிஞர் காசி ஆணந்தன் ஐ.பீ.சி. தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், இன்று பரவலாக இருந்து வருகின்ற பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களை வழங்கியுள்ளார்.