அமெரிக்க - கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம்! காரணம் வெளியானது
கனடா - அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இவர்களின் மரணம் தொடர்பாக தூதரக ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று இந்திய தூதர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள்,ஒருவர் நடுத்தர வயது உடையவர்,அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
எல்லையை எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்து கிளம்பிய அவர்கள் பனியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கனடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
