இந்திய கோவிட் மாறுபாடு நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடுமென எச்சரிக்கை
கொழும்பு - தெமட்டகொடயில் நேற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய மாறுபாடு நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் உள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தெமட்டகொடயின் 66 வது தோட்டம் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இந்த பகுதியில் குறைந்த வசதிகளுடன் கூடிய மக்கள் தொகையினர் வசிப்பதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
149 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் தூய்மைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கணிசமான மக்கள் முச்சக்கர வண்டி சாரதிகளாவர். குடியிருப்பாளர்களில் சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
அத்தகைய பின்னணியில், இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதால், தொற்று நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய கடுமையான ஆபத்து உள்ளது என்று ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் இருந்தாலும், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் புறக்கணித்து வருவதாக அவர் கூறினார்.
எனவே, இது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும்
ஆபத்தான இந்திய மாறுபாட்டின் பரவலைத் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும்
எடுக்க வேண்டும் என்றும் உபுல் ரோஹன கோரியுள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
