எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடல்
எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பதற்காக கூட்டாக அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய உயர்மட்டக் குழு ஒன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
இக் கலந்துரைாயடல் நேற்று (25.03.2023) நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் முன்முயற்சிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க ஆலோசனைகளை வழங்கியதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் அமைப்புகள்
இதேவேளை சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் அமைப்புகளை இந்தியா இலங்கைக்கு பரிசாக அளிக்கும் என்றும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
The delegation presented a vest made out of recycled PET bottles and an indoor solar cooking system. 500 such systems are being gifted by @IndianOilcl for use in #SriLanka.(2/2) pic.twitter.com/7RyBwJnbbm
— India in Sri Lanka (@IndiainSL) March 25, 2023
இந்திய மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா ஆகியோர் முன்னதாக திருகோணமலையில் அமைந்துள்ள ஐஓசியின் முனையத்திற்கு சென்று திரும்பினர்.
இலங்கையும் இந்தியாவும் இணைந்து திருகோணமலையில் இரண்டாம் உலகப் போர் கால சேமிப்பு
தொட்டிகளில் எரிபொருளை சேமித்து வைக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில்,
இந்திய குழுவின் இலங்கை பயணம் இடம்பெற்றுள்ளது.