இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்மொழியப்பட்ட இந்த விஜயம் தொடர்பான கலந்துரையாடல்கள், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ விஜயம்
குறித்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri