கனேடிய இராணுவ இணையதளம் மீது தாக்குதல்: பொறுப்பேற்கும் இந்திய சைபர் படை
கனேடிய இராணுவ இணையதளத்தை ஹேக் செய்தற்கு இந்திய ஹேக்கர்கள் பொறுப்பேற்றுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடியப் படைகளின் இணையதளம் கடந்த வியாழன் பிற்பகல் செயலிழந்ததையடுத்து இந்திய சைபர் ஃபோர்ஸ் என்ற குழு இதற்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹேக்கிங் மிரட்டல்
இந்நிலையில் இந்தியா - கனடா உறவுகள் மோசமடைந்ததை அடுத்து, கடந்த 21ஆம் திகதி, 'எங்கள் பலத்தை உணர தயாராகுங்கள்' என்று இந்திய சைபர் ஃபோர்ஸ் ஹேக்கிங் மிரட்டல் விடுத்தமைக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனேடிய ஆயுதப் படைகளின் இணையதளம் செயலிழந்துள்ளது என தேசிய பாதுகாப்புத் துறையின் ஊடக உறவுகளின் தலைவர் டேனியல் லு பொட்டிலியர் தெரிவித்துள்ளார்.
இதன் போது ஹேக் செய்யப்பட்ட இணையதளம் இராணுவத்தின் மற்ற தளங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும் பெரிய அளவில் பாதிப்புஏற்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Canadian Airforce Website has been taken down ?
— Indian Cyber Force (@CyberForceX) September 27, 2023
>Target - https://t.co/nNzSz3kAHr
>Check host - https://t.co/nH67OaEhMY
Duration: 2 hour#Fuckcanada pic.twitter.com/khfhVQAV2R
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கனேடியப் படைகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |