இந்திய துடுப்பாட்ட மட்டை : இலங்கை வீரர் பானுக ராஜபக்சவின் விளக்கம்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்திய வீரர்களின் துடுப்பு மட்டைகள் குறித்து பானுக ராஜபக்ச கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட நிலையில், அவர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வீரர்கள் பயன்படுத்தும் துடுப்புகள் அதிக வேகம் மற்றும் சக்தியை வெளிப்படுத்துவதாகவும், அதன் மேல் ரப்பர் அடுக்கு இருப்பது போன்ற உணர்வைத் தருவதாகவும் பானுக கூறியிருந்தார்.
இதுவே தவறான புரிதலுக்கு காரணமானது.
இளம் வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான அனுபவம்
இந்த நிலையில், இது இந்திய துடுப்பு மட்டை உற்பத்தியாளர்களின் உயர்தரத் தரத்தை (High Quality Standards) பாராட்டுவதற்காகக் கூறப்பட்டதே தவிர, அவை விதிகளை மீறிய 'சட்டவிரோத' துடுப்பு மாட்டகைகள் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை வீரர்களுக்கு இடையிலான அதிரடி ஆட்ட வித்தியாசத்திற்கு அவர் சில காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பெரிய மைதானங்களில் விளையாடுவதால், வீரர்கள் பந்துகளை இடைவெளிகளில் (Gaps) அடித்து ஓட்டங்களை சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
எனினும் இந்தியாவில் சிறிய மைதானங்களில் விளையாடிப் பழகுவதால், சிறுவயது முதலே எல்லைக்கோட்டைத் தாண்டும் (Six-hitting) தன்னம்பிக்கையும் தசை நினைவாற்றலும் (Muscle memory) அங்குள்ள வீரர்களுக்கு அதிகம் என்றும் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு IPL ஒரு முக்கிய காரணம் என்று அவர் புகழ்ந்துள்ளார். உலகின் சிறந்த T20 லீக் இதுவென்றும், இளம் வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான அனுபவத்தை இது வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri