நான்கு இந்திய கடற்தொழிலாளர்களின் படகு உரிமைக்கான வழக்கு ஒத்திவைப்பு(Photo)
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய கடற்தொழிலாளர்களின் படகு உரிமைக்கான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் நான்கு படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த படகுகள் உரிமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த படகுகளிற்கான உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி
இருந்தனர்.
வழக்கினை ஆராய்ந்த நீதவான் மார்ச் மாதம் முதலாம் திகதி கட்டளைக்காக திகதியிட்டுள்ளார்.
வழக்கு தொடுனர் சார்பில் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை
திணைக்கள அதிகாரி எம்.ராஜேந்திரா முன்னிலையாகி இருந்தார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri