விசா இன்றி 2 வருடமாக இலங்கையில் வசித்த இந்தியர் கைது
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து விசா இன்றி 2 வருடமாக இலங்கையில் வசித்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு நகரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நிலையில் இன்று (15.07.2023) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளளர் .
பொலிஸார் விசாரணை
தமிழ்நாடு சின்ப்பள்ளிகிராமம் கம்பள்ளி பேஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்
சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர் கடந்த 2021ம் ஆண்டு சுற்றுலா விசாவில்
இலங்கைக்கு வந்த நிலையில் யாழ்ப்பாணம் கைலாசர்பிள்ளையர் கோவில் பகுதியில்
தங்கிருந்துள்ளார்.
சந்தேகநபர் இன்று மட்டக்களப்பு நகர்பகுதியில், மட்டக்களப்பை சேர்ந்த மற்றுமொருவருடன் சத்தேகத்திற்கு இடமாக நடமாடிய நிலையிலேயே பொலிஸார் இருவரையும் கைது செய்துதுள்ளனர்.
இது குறித்த விசாரணையின் போதே விசா இன்றி கடந்த 2 வருடங்களாக தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
