இந்தியப்படை வந்திறங்கியபோது கொழும்பில் நின்ற பாக்கிஸ்தான் படைகள்
1971ம் ஆண்டு இந்தியப் படைகள் இலங்கை வந்த போது ஏற்கனவே இலங்கையின் ரத்மலான விமான நிலையத்தில் பாக்கிஸ்தான் ராணுவமும், அதனது வான்படையும் நிலைகொண்டிருந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்.
IBC-தமிழ் தொலைக்காட்சியின் ‘முப்பரிமாணம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்தியாவை சிறிலங்கா எப்படி விரோதிக்கின்றது என்கின்ற கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது இலங்கையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்தியாவை விட்டுவிட்டு 2700 கி.மீ. தொலைவில் உள்ள பாக்கிஸ்தானிடம் இலங்கை ரணுவ உதவி கோரியதுடன், பாக்கிஸ்தான் ராணுவத்தை இந்தியாவிற்கு தெற்காக கொழும்பில் நிலைகொள்ள இலங்கை வழிசமைத்திருந்ததையும் அவர் சுட்டிக்காண்பித்திருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பான அவரது உரையாடலில் சில பகுதிகள் இதோ:
