நெடுந்தீவுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர் (Photos)
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது நேற்றையதினம் மேற்கொண்ட இந்த விஜயத்தில் நெடுந்தீவில் வறிய தெரிவுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் உலர் உணவுப் பொருட்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினை அமைத்தல் தொடர்பாக இந்திய தூதருடன் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்து இடங்களை சென்று பார்வையிட்டனர்.
இந்திய தூதுவரின் தீவக சுற்றுப் பயணத்தில் நெடுந்தீவில் உள்ள புராதன தொல்லியல் சின்னங்கள் உள்ளிட்ட இடங்களையும் தூதர் பார்வையிட்டதுடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மேலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், நயினாதீவு நாக விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நயினாதீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
