இந்தியா ஆதரவாகவே வாக்களிக்கும்! - இலங்கை அரசின் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “இந்தியா இலங்கையின் ஒரு சிறந்த நட்பு நாடு.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமர்வுக்கு முன்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.
எவ்வாறாயினும், வாக்களிப்பதைத் தவிர்ப்பது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு தடையாக இருக்காது எனவும் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
