இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
Sound ??
— BCCI (@BCCI) January 7, 2023
SKY on the charge! ??#TeamIndia | #INDvSL | @surya_14kumar | @mastercardindia pic.twitter.com/uG7AVXUoTj
இந்த நிலையில்,229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, 2 - 1 என்ற அடிப்படையில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
