தென்னாப்பிரிக்காவின் வரலாற்று வெற்றி! இந்திய அணியை கடுமையாக விமர்சித் அஸ்வின்
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில், இந்திய அணியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இது வெறும் வெற்றியல்ல, ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து செயல்பட்ட ஒரு 'தந்திரோபாய மாஸ்டர் கிளாஸ்' ஆகும்.
இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய செய்த போட்டி
தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்தனர்.

லுங்கி என்கிடி (Lungi Ngidi) 4 ஓவர்களில் வெறும் 15 ஓட்டங்களை மட்டுமே வழங்கி, இந்திய அணியை கட்டுப்படுத்தினார்.
மார்கோ யான்சன் (Marco Jansen) தனது 6 அடி 8 அங்குல உயரத்தைப் பயன்படுத்தி, பந்தை சீரற்ற முறையில் எகிறச் செய்து 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கடுமையாக விமர்சித் அஸ்வின்
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி இந்தப் போட்டிக்குத் தயார் நிலையில் இல்லை என விமர்சித்துள்ளார்:
"தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பித்துள்ளது. சூரியகுமார் யாதவ் எதிர்கொண்ட 22 பந்துகளில் 17-18 பந்துகள் மெதுவான பந்துகளாகவே இருந்தன.
தென்னாப்பிரிக்கா இனி 'சோக்கர்ஸ்' (Chokers) அல்ல, அவர்கள் மாறிவிட்டார்கள்." ஆரம்பத்தில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்காவை, டேவிட் மில்லர் (63 ஓட்டங்கள்) மற்றும் டிவால்ட் பிரெவிஸ் மீட்டெடுத்தனர்.
வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை இலக்கு வைத்த மில்லர், அவரது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி 47 ஓட்டங்களை விளாசினார். மில்லர் மற்றும் பிரெவிஸ் ஜோடி 97 ஓட்டங்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.