கொழும்பில் நடந்த போட்டியில் 'சங்கடமான பிழை'.. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் இடையே குழப்பம்!
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05.10.2025) நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் போது நாணய சுழற்சி குறித்த குழப்பம் சர்ச்சையையும் நியாயமற்ற ஆட்டம் குறித்த குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நாணய சுழற்சியின் போது, இந்திய அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் நாணயத்தை மேல் நோக்கி சுண்டினார். இதனையடுத்து, பாகிஸ்தான் தலைவி பாத்திமா சனா "டெயில்ஸ்" என்று கூறினார்.
இருப்பினும், நாணய சுழற்சியின் தொகுப்பாளர் மெல் ஜோன்ஸ் மற்றும் போட்டி நடுவர் ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ் ஆகியோர் அழைப்பு "ஹெட்ஸ்" என்று அறிவித்தனர். நாணயம் தலையில் விழுந்தது.
சங்கடமான பிழை
அதிகாரிகள் பாகிஸ்தான், நாணய சுழற்சியில் வென்றதாக அறிவித்தனர். சனா உடனடியாக முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
Toss Controversy 🚨
— Globally Pop (@GloballyPop) October 5, 2025
india vs Pakistan ICC Women's World Cup Match Today.
🇮🇳 Harmanpreet Kaur flips the coin
🇵🇰 Fatima Sana calls TAILS
Heads it is says the referee
Pakistan wins the Toss
But, it's 12-0 Now 🔥
Video 📷#INDWvPAKW #IndianCricket pic.twitter.com/xdodnKYrmy
இந்த சம்பவம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் ஆய்வாளர்கள், இந்த குழப்பத்தை 'சங்கடமான பிழை' என்று விபரித்துள்ளனர்.
India vs Pakistan Match🏆🚨
— Globally Pop (@GloballyPop) October 5, 2025
❌ No Handshakes,
After the Match and after the toss, Team india directly went to the Dressing room after the win🔥
Fact -
Women's team never won a ODI match against team india
World Cup 4-0
Overall 12-0
Video📷#INDWvPAKW pic.twitter.com/01smvo5a9y
இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அதேநேரம், இரண்டு அணித் தலைவிகளும், நாணய சுழற்சியின் போது கைகுலுக்குவதைத் தவிர்த்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 17 மணி நேரம் முன்

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
