இந்திய மாறுபாட்டிற்கு டெல்டா என பெயர் வைத்த உலக சுகாதார அமைப்பு!
உலக நாடுகளுக்கு கோவிட் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கோவிட் தொற்றின் இந்திய மாறுபாட்டிற்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட் தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கோவிட் வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிட் என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கோவிட் வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கோவிட் வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.
இதேபோல், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கோவிட் ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கோவிட் பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கோவிட் எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 13 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri