இந்தியா- அமெரிக்கா இணையும் மிகப்பெரிய எரிசக்தி கூட்டணி
இந்தியா அமெரிக்கா இடையே பசுமை எரிசக்தி கூட்டு முயற்சிகள் தொடர்பான அமைச்சர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் நேற்று(20.07.2023) நடைபெற்ற குறித்த கூட்டத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் க்ரான்ஹோம் ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
எரிசக்தி ஒத்துழைப்பானது இருநாடுகளும் இடையே வளர்ந்து வரும் நிலையில் இருதரப்பு பசுமை எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் எட்டியுள்ள மைல்கற்கள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி மாற்றம்
எரிசக்தி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி கண்டுபிடுப்புகள், பருவநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலைகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
மலிவான, நம்பிகைக்கு உகந்த பசுமை எரிசக்தி விநியோகம் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த பேச்சுக்கள் நடைபெற்றன. இந்தியாவும் அமெரிக்காவும் இருபெரும் ஜனநாயக நாடுகள் என்பதோடு அளவில் பெரியதும் அதிவேகமாக வளர்ந்து வருவதுமான பொருளாதாரங்களாக திகழ்வதால் இருநாடுகளும் இணைந்து இந்த விவகாரத்தில் கூட்டாக பயணிப்பது இருதரப்பு நலனுக்காக மட்டுமின்றி உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுப்பதாக அமையும் என்று முடிவெடுக்கப்பட்டது.
பசுமையான மாசற்ற எரிசக்தியை எதிகாலத்தில் எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும், இதற்கான திறன்களை மேம்படுத்துவது எப்படி, ஆய்வகங்கள் வாயிலான ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed reports of 5 Working Groups under SCEP with @SecGranholm
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 19, 2023
Emphasised initiatives across Clean Energy sector by 5 pillars of SCEP. Committed to further enhance cooperation under bold clean energy agenda underscored by PM @narendramodi Ji during his meeting with @POTUS pic.twitter.com/edqoDnEu0L
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
