பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை கண்காணிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவில் செய்மதியை நிறுவும் இந்தியா
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கண்காணிப்பதற்காக, செய்மதி ஒன்றை உருவாக்கும் திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த செய்மதி நிறுவப்பட்டால், அது இந்திய இராணுவத்திற்கு பெரும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பரேசன் சிந்தூர்
காஸ்மீரின் பஹல்காமில் 26 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஒப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய இராணுவம் நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கையில் இந்திய உளவுத்துறை முக்கிய பங்கு வகித்தது.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் குறித்து சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்தே, இந்திய அரசாங்கம் தனது உளவுத்தகவல்களை சேகரிக்கும் சக்தியை மேலும் வலுப்படுத்த பாரிய திட்டத்தை வகுத்துள்ளது.
உளவு செயற்கைக்கோள்
இதன்படி, இந்திய அரசாங்கம், உளவு செயற்கைக்கோள் அமைப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு சுமார் 3 பில்லியன் டொலர்கள் அதாவது 22,500 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (sbs-3) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில், பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
You May Like This..