ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் பெறும் இந்தியா - கிழக்கு கடற்கரையை நோக்கி விரையும் கப்பல்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து மசகு எண்ணெயைப் பெறும் இந்தியா, இதற்கான முதல் சரக்குக் கப்பல் இந்த வாரம் இந்தியக் கடற்கரையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
கிழக்கு கடற்கரையை நோக்கி கப்பல்
இதன் விளைவாக, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கோர்ப்பரேஷன் (IOC), 'ஜெயா' (Jaya) என்ற கப்பல் மூலம் இந்த மசகு எண்ணெயை வாங்கியுள்ளது.

எல்.எஸ்.இ.ஜி மற்றும் கெப்லர் (LSEG and Kpler) தரவுகளின்படி, இந்தக் கப்பல் தற்போது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் அழுத்தத்தினால் 2019ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது.
இருப்பினும், தற்போதைய அமெரிக்க-இஸ்ரேல் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இடையூறு
குறிப்பாக, உலக மசகு எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளே இந்தியா மீண்டும் ஈரானை நாட முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இது தவிர, 'ஜோர்தான்' (Jordan) என்ற மற்றொரு கப்பலும் இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான கட்டணங்களைச் செலுத்துவதில் தற்போது எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்திய எண்ணெய் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் Manithan