பாகிஸ்தானை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ள மோடியின் அதிரடி நடவடிக்கை
மிகவும் சக்திவாய்ந்த இரு ஜெட் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியா தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த புதிய நகர்வின் காரணமாக பாகிஸ்தானுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 114 Rafale ஜெட் விமானங்கள், 6 P-8I ஜெட் விமானங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.
அதேவேளை, இந்திய விமானப்படை (IAF) மற்றும் இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், 114 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஆறு கூடுதல் P-8I ஜெட் விமானங்கள் மற்றும் 113 F-404 என்ஜின்களை வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
போர் விமானங்கள்
இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் திறனையும் வலிமையையும் மேம்படுத்தும். பிரெஞ்சு நிறுவனமான Dassault Aviation மற்றும் Indian aerospace நிறுவனங்கள் இணைந்து கட்டமைக்கும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படையிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெற்றுள்ளது.

2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய இந்த திட்டம், அடுத்த சில வாரங்களில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் சபையால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்தியாவிடம் உள்ள 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் 2016 ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டன. ஓபரேஷன் சிந்தூரின் போது, ரஃபேல் போர் விமானம் சீனாவின் PL-15 ஏவுகணைகளை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam