பிலிப்பைன்ஸுக்கு சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வழங்கிய இந்தியா
இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
375 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஏவுகணை வழங்கப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏவுகணை அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் அரசியல் பதட்டங்கள்
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான ஏவுகணை ஒப்பந்தத்தின் முதல் படியாக இது செய்யப்பட்டது அதற்கான ஒப்பந்தம் 2022ல் கையெழுத்தாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் ஏவுகணை இறக்குமதியானது, தென் சீனக் கடலில், சர்வதேச கவனத்தை ஈர்த்து, சீனாவுடன் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தனது கடலோரப் பகுதிகளில் ஏவுகணை அமைப்பை நிறுவும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |