ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் ரஷ்யா போரை மறைமுகமாக ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்க ஜனாதிபதி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று(6) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணம்
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர் என்றும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது நல்ல விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடி தன்னை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சமிபத்திய 8 போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும், அவற்றில் 6 போர்களை வரி விதிப்புகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam