இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெட்ரோலிய குழாய் அமைக்க முன்மொழிவு
இந்தியா-டெல்லியும் கொழும்பும் பெட்ரோலியக் குழாய்க்கு வழி வகுக்கும் தொழில்நுட்ப விவாதங்களை ஆரம்பிக்கவுள்ளன.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மலிவு விலையில் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து உள்ள யாழ்ப்பாணம் வரை குழாய் அமைப்பதற்கான முன்மொழிவு, தற்போது விவாதத்தில் உள்ளது.
எரிபொருளை மலிவாக்க யோசனை
இருப்பினும், இந்த முன்மொழிவுகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன.
இலங்கையில் எரிபொருளை மலிவு விலைக்கு கொண்டு வருவதே இந்த குழாய்த்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
2022 பொருளாதார நெருக்கடியே இந்த பேச்சு வார்த்தைக்கு பிராதன ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பரவலான மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு பொதுமக்களின் அதிருப்தியை தூண்டியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |