இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்
தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகிறது என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
செரியாபாணி' என்ற பெயரைக்கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நாகை - இலங்கைக்கு இடையே இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல் கொச்சினில் தயாரிக்கப்பட்டதாகும்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் இன்று(07.10.2023) நாகை துறைமுகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரியாபாணி கப்பல் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்; சோதனைகளை ஓட்டங்களை நடத்துகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர்.
40 கிலோ அனுமதி
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் 60 கடல் மைல் கல்லில் உள்ளது. இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நாகை - இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வெறும் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
