இந்தியாவினால் வழங்கப்பட்ட உளவு விமானம் ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோர்னியர் உளவு விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.
டோர்னியர் விமானம் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன்போது பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பு என உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
Like fruits of other areas of cooperation with ??,the gift of Dornier to @airforcelk is of relevance to ?? and a step to meet its requirements for maritime safety and security. It is an example of ??'s strength adding to the strength of its friends (1/2) pic.twitter.com/DJjPMBVIZY
— India in Sri Lanka (@IndiainSL) August 15, 2022
இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்ட டோனியர் 228 விமானம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும். அதேசமயம் வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
அத்துடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றதாக இந்திய உயர்ஸ்தானிகராலய டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.