இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராகும் வாய்ப்பை பெற்றுள்ள பும்ரா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக பும்ராவை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பரிந்துரை செய்திருக்கிறார்.
டெஸ்ட் அரங்கில் இருந்து அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.
புதிய இந்திய தலைவர்
எனவே அடுத்து ஜூன் 20 முதல் ஒகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு புதிய இந்திய தலைவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்தநிலையில், அவுஸ்திரேலிய தொடரில், முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் இல்லாத நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்ற பும்ரா வெற்றியை தேடி தந்தார்.
எனவே, அவரை இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிகளுக்கும் தலைவராக நியமிக்கலாம் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக பும்ராவை நியமிப்பதே சிறந்தது.
வேறு ஒருவரை நியமித்தால், அவரும் பும்ரா உதவியையே நாடுவார். பும்ராவை பொறுத்தவரையில், அவர் எந்த நேரத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்றவர்.
எனவே, பும்ரா தலைவராக இருந்தால், தான் எப்போது பந்துவீச வேண்டும், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை எளிதில் அவர் முடிவு செய்யலாம்; என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர இடம்
முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தும், பும்ரா இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம் என்ற நிலையில், அவரை தலைவராக நியமிக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து தொடருக்கு முன்னர், டெஸ்ட் அரங்கில் இருந்து ரோகித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றது வியப்பானது என்று முன்னாள் தலைவர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார் .
முன்னர் அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் அஸ்வின் ஓய்வு பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ள கும்ளே, இவர்கள் மூவரும் மைதானத்தில் இருந்து, ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் விடைபெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
