இலங்கை இராணுவத்திற்கு நிதியுதவி வழங்கவுள்ள இந்தியா
இலங்கை இராணுவத்தினரின் பயிற்சிகளுக்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்தியா- இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படைகளின் ‘மித்ரா சக்தி’ கூட்டுப் பயிற்சி விரைவில் நடைபெற உள்ள நிலையில் மேஜா் ஜெனரல் சந்தனா விக்ரமசிங்க தலைமையிலான இராணுவ குழுவினர் நேற்றையதினம் (28.10.2023) இந்திய தூதுவர் சத்யாஞ்சல் பாண்டேயை சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளனர்.
9 ஆம் 'மித்ரா சக்தி' கூட்டுப் பயிற்சி
இதன்போது இலங்கை இராணுவத்தின் பயிற்சிக்கு 23 மில்லியன் இலங்கை ரூபாவை நிதியுதவியாக இந்தியா வழங்க உள்ளதாக தூதுவர் சத்யாஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டடுள்ளது.
இது இலங்கை- இந்திய இராணுவத்துக்கு இடையில் முன்னெடுக்கப்படும் 9 ஆம் 'மித்ரா சக்தி' கூட்டுப் பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
