இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: நடந்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவுக்கும்(India) பாகிஸ்தானுக்கும்(Pakistan) இடையில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற வந்த மோதல்களை அமெரிக்கா தலையிட்டு, நிறுத்தியதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தகவல்களின்படி, கடந்த நான்கு நாட்கள் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள், ட்ரோன் ஊடுருவல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குப் பின்னர், பாகிஸ்தானே, அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்துக்கு முதலில் உடன்பட்டது.
போர் நிறுத்தம்
இதனையடுத்தே அமெரிக்காவும் இந்தியாவுடன் இந்த விடயத்தை பேசி அந்த நாட்டையும் போர் நிறுத்தத்துக்கு உடன்படச் செய்துள்ளது.
இந்திய தகவல்களின்படி, 2025 மே 10 அன்று விடியற்காலையில், இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளங்களை குறிவைத்து பிரம்மோஸ்-ஏ என்ற குரூஸ் ஏவுகணைகளை ஏவின இந்த தாக்குதல்கள் ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள சக்லாலா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவில் நிகழ்ந்தன.
இந்தநிலையில், பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை இந்தியா குறிவைக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கள் கண்டறிந்தன.
இந்திய இராணுவம்
இந்த சூழ்நிலையிலேயே, பாகிஸ்தான் அவசர தலையீட்டைக் கோரி, அமெரிக்காவைத் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிகாரிகள், இந்த விடயத்தில் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருந்த நிலையில், பாகிஸ்தானின் மூலோபாய சொத்துக்கள் குறித்த எச்சரிக்கை, அமெரிக்க அதிகாரிகளை இன்னும் தீர்க்கமாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பொதுவில் இந்த விடயத்தில் நடுநிலையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தாலும், இஸ்லாமாபாத்திற்கு ஒரு உறுதியான செய்தியை தெரிவித்ததாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
தாமதமின்றி பதற்றத்தைக் குறைக்க, இந்திய இராணுவத்துடனான நேரடித் தொடர்பை செயல்படுத்துமாறு, பாகிஸ்தான் தரப்புக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.
இதன்படியே, மே 10 ஆம் திகதி பிற்பகல் 15.35க்கு, பாகிஸ்தானின் போர் நடவடிக்கைக்கான இயக்குநர் மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா, தனது இந்திய சகா லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்க்கு நேரடி அழைப்பு விடுத்தார்.
இராணுவ பேச்சுவார்த்தை
இந்தநிலையில், நெறிமுறைக்கு வெளியே பாகிஸ்தானுடன் எந்தவொரு முறையான இராஜதந்திர அல்லது இராணுவ பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருந்தது.
பாகிஸ்தானின் எரிசக்தி மற்றும் பொருளாதார இலக்குகள் மற்றும் ஆழமான மூலோபாய கட்டளை கட்டமைப்புகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு, இந்திய ஆயுதப்படைகள் தயாராக இருந்ததன் காரணமாக, இந்திய அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்தது.
இதேவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் நாளைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
