போர் நிறுத்தம் ஒரு புதிய தொடக்கம்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (11) மோடியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதேவேளை இந்தியாவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை உரியவகையில் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
போர் நிறுத்தம்
பிராந்தியத்தை பாதித்து அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய அதன் பயணத்தைத் தடுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இந்த போர் நிறுத்தம், ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பாகிஸ்தான் நம்புவதாக பிரதமர் செபாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
