இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மீண்டும் முறுகல்: இராஜதந்திரி ஒருவரை வெளியேற்றும் இந்தியா
தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவுக்கு எதிராக செயற்;பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
போர் நிறுத்தம்
காஸ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 7 முதல் 10ம் திகதி வரை இரண்டு நாடுகளும் போர் ஒன்றில் ஈடுபட்டன.
எனினும், பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை, “ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என அறிவித்து, அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
