இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் விரர் டேவிட் ஜோன்சன்( David Johnson) மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தின் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டேவிட் ஜோன்ஸன் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்து சம்பவம், பெங்களுருவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மரணம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைய நாட்களாக ஜோன்சன் நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும் கடந்த வாரமும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன்சனின் மரணத்திற்கு இந்திய கிரிக்கட் வீரர்கள் பலர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக அணியின் சார்பில் அபார திறமைகளை வெளியிட்டுள்ள ஜோன்சன், முதல்தரப் போட்டிகளில் 125 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
