இந்திய எரிபொருள் நிறுவனத்துக்கும் விலை சூத்திரம் அறிமுகம் - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!
லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான பொதுவான எரிபொருள் விலை சூத்திரம் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கையின் எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்காக புதிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் இன்று நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையை ஆற்றிய காஞ்சன விஜேயசேகர, லங்கா ஐஓசியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் ஏற்படும் 1.6 பில்லியன் ரூபா இழப்பைக் குறைக்கும் வகையிலேயே எரிபொருள் விலை திருத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுப்பதே தமது நோக்கமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan