இந்தியாவில் முதன்முறையாக “ஓாினச்சோ்கையாளா்“ நீதிபதியாகிறாா்
இந்தியாவில் முதன்முறையாக ஓாினச்சோ்க்கையாளர் சட்டத்தரணி ( Openly Guy lawyer )ஒருவா் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
சிரேஸ்ட சட்டத்தரணியான சவுரப் கிா்பால் (Saurabh Kirpal) என்பவரை நீதிபதியாக நியமிக்க இந்தியாவின் உச்சநீதிமன்றம் பாிந்துரை செய்துள்ளது.
இந்தியாவின் நீதிபதியை நியமிக்கும் செயல்முறை அரசாங்கத்தின் முறையான ஒப்புதலையும் உள்ளடக்கியது.
இதன்படி எதிர்வரும் வாரங்களில் கிா்பாலின் பெயரை, நரேந்திர மோடியின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பாா்க்கப்படுவதாக பிபிசி தொிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று தீர்ப்பளித்தது.
இது இந்தியாவில் ஓாினச்சோ்க்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
இது தொடா்பான வழக்கில் சட்டத்தரணி கிர்பால் முக்கிய மனுதாரர்களின் சட்டத்தரணியாக செயற்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.





