கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்! தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
இந்த வாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த சீன போர்க்கப்பலை இந்தியா கண்காணித்து வருகிறதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது ஒரு போர்க்கப்பலா இல்லையா என்பது தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் இந்தியா கவனமாக கண்காணிக்கிறது.
இந்தியா எடுததுள்ள நடவடிக்கை
இந்தியா தனது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.
சீன போர்க்கப்பலான HAI YANG 24 HAO ஆகஸ்ட் 10ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்த நிலையில் இன்று (12.08.2023) கொழும்பில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தென் இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டைக்கு வந்தமை இந்தியாவிடம் இருந்து கடுமையான எதிர்வினைகளை எழுப்பியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |