இலங்கையுடன் இயற்கை விவசாயத்தில் கைக்கோர்த்துள்ள இந்தியா
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி, இந்திய உயர் ஸ்தானிகராலயம் 2021 ஜூலை 01 அன்று ஒரு இணையம் மூலமான இருதரப்பு தொடர்புகளை ஏற்பாடு செய்தது.
இதில் இயற்கை விவசாயத்தின் இந்தியாவின் வெற்றிக் கதைகள் பகிரப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சிறப்புரையாற்றினார்.
இலங்கையின் சார்பில் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத்துறை அமைச்சர் சீதா அரம்பேபொல மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரும் உரையாற்றினர்.
இயற்கை விவசாயத்தில் இலங்கையுடன் ஒத்துழைப்பதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், நிறுவனங்களிடையே ஆராய்ச்சி ஒத்துழைப்பு விடயங்களில் பரந்த இந்திய அனுபவத்தைப் பயன்படுத்தவும் அவர் இலங்கைக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்திய உதவியுடன் இலங்கையில் ‘சிறப்பான இயற்கை விவசாய நிலையம் ஒன்றை அமைக்க அவர் பரிந்துரைத்தார். இலங்கை அமைச்சர் சீதா அரம்பேபொல, இயற்கை விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் இரு தரப்பிலிருந்தும் அதிக தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைக் கோரினார்.
இலங்கை 100 சதவீத இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர். சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் திறன்களும், இந்த துறையில் நிபுணத்துவமும் இலங்கைக்கு பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
