இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் - இந்தியா உறுதி
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் உதவுவதாக இந்தியா உறுதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்ற சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளருடனும் சந்திப்பு
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கைக்கு வரும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை தவிர்க்கும் ராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
இதனிடையே, இலங்கையின் நிலைமை குறித்து அமெரிக்காவும், இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன், இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கனையும் சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
A warm first meeting with FM Ali Sabry of Sri Lanka. Congratulated him on his new responsibility.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 4, 2022
Reaffirmed India’s commitment, as a dependable friend and reliable partner, to the economic recovery and well being of Sri Lanka.
Neighbourhood First. pic.twitter.com/qTCtmFm89h