தமிழர்களுக்காக பேசிய ஒரே நாடு இந்தியா!
இலங்கை சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பாக ஜெனிவாவில் முதன் முதலாக 13 ஆவது திருத்தச்சட்ட தீர்வு திட்டத்தை முன்வைத்த நாடு இந்தியா எனவே இதனை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டம்
அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பாக ஜெனிவாவில் முதன் முதலாக 13 ஆவதுதிருத்தச்சட்ட தீர்வு திட்டத்தை முன்வைத்த நாடு இந்தியா.
ஒரு நாட்டில் இருக்கின்ற ஒரு இனத்துக்காக பேசியது என்பது ஒரு வரலாற்று தசாப்தமாகும். எனவே இதனை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொண்டு அதற்கான கட்டுமான பணிகள் மற்றும் செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதிபூண அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்ற தொனியில் இந்திய அரசு ஐ.நா வில் முன்வைத்த விடயம் பாராட்டக்கூடியது, கௌரத்துக்குரியது, ஏற்றுக்கொள்ளக்கூடியது.
சிறுபான்மை மக்களுக்காக முன் நின்ற இந்தியா
பல தசாப்தங்கள் ஜக்கிய நாடுகள் கூடி ஜெனிவாவில் பல தீர்மானங்கள் எடுத்திருந்தாலும் கூட, இலங்கை சிறுபான்மை மக்கள் தொடர்பாக தீர்வு திட்டத்தை ஜ.நா வில் முதல் முதலாக ஒரு நாடு முன்வைத்தது என்றால் அது இந்திய அரசுதான்.
எனவே இதனை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு இதனை சரியாக அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்புகளை நல்க வேண்டும்.
ஜ.நா வில் இந்திய அரசால் முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை அரசு
அமுல்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் அதற்கான ஆரம்ப கட்டுமான பணிகளை
தொடங்குவதற்கு நாங்கள் உறுதிபூண வேண்டும்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
