இந்து சமுத்திரத்தில் கண்காணிப்பை அதிகரிக்கும் இந்தியா
இலங்கைக்கு அருகில் உட்பட இந்து சமுத்திரம் முழுவதும் தனது கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக Predator ரக ட்ரோன் விமானங்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் செயற்பாடுகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் இதன் காரணமாக காண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய கடற்படை கூறியுள்ளது.
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறித்து கூடிய கவனத்தை செலுத்த இந்த ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்படும் என இந்தய கடற்படையின் பிரதி தளபதி வைஸ் அத்மிரல் பீ. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவிடம் இருந்து 30 ட்ரோன் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் சென் டியாகோ அணுசக்தி நிறுவனம் தயாரித்துள்ள MQ-9B ரக ட்ரோன் விமானத்திற்கு 48 மணி நேரம் தொடர்ந்தும் ஆயிரத்து 700 கிலோ மீற்றர் விரை பறக்கும் திறன் உள்ளது.
அத்துடன் ஏவுகணை உட்பட பயங்கரமான ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் இந்த ட்ரோன் விமானங்களுக்கு இருப்பதே பாரதூரமான விடயமாக கருதப்படுகிறது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
