எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய கடற்தொழிலாளர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே இன்று இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 04 கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரணைத்தீவு அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
