இந்திய ட்ரோன்களின் தாக்குதல்கள்: பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் கராச்சிக்கு மாற்றம்
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் கராச்சிக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அசல் அட்டவணையின்படி, போட்டியின் அடுத்த கட்டம் ராவல்பிண்டியில் உள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட உத்தரவு
பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை
இருப்பினும், லாகூர், குஜ்ரான்வாலா மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் இந்திய ட்ரோன்களின் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக இந்தப்போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இன்று ராவல்பிண்டி மைதானம் அருகிலும், ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது, முன்னதாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கின்; 10வது பதிப்பு ரத்து செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், போட்டிகள் திட்டமிட்டபடி தொடரும் என்று பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
