பேர்ள் கப்பல் தீப்பரவலின் போது நாடகமாடிய இந்தியா! உண்மைகளை அம்பலப்படுத்தும் சார்ள்ஸ்
இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த கப்பலை கட்டுப்படுத்தக் கூடிய பலம் இருந்தும் இதனை இந்தியா முழுமையாக பயன்படுத்தவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் வெளியுறவு கொள்கைகளில் ஏற்பட்ட பிழையாக கருத்துக்களே இந்தியா இவ்வாறு செயற்பட காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு கொள்கையின் காரணமாக இலங்கை இந்தியாவினை முழுமையாக எதிர்த்தன் காரணமாகவே இந்தியா குறித்த கப்பலின் தீப்பரவலை கட்டுப்படுத்துவதில் முழுமையாக செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், இலங்கையால் இந்த கோவிட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகவுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனை எதிர்த்து சீனாவின் பக்கம் இலங்கை நிற்பதால் கோவிட் தடுப்பூசிகளை இந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கப் பின்னடிக்கின்றன. முதலில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா தற்போது வழங்க மறுத்துவிட்டது.
கொழும்புத் துறைமுகக் கடல் பரப்பில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது
இலங்கை இந்தியாவின் உதவியைக் கேட்டது. ஆனால், இந்தியா முழு மனதுடன் உதவவில்லை.
இந்தியா நினைத்திருந்தால் அந்தக் கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தியிருக்க
முடியும்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் தவறே இந்தியா இவ்வாறு வேண்டா வெறுப்பாக
செயற்படக் காரணம் என்றார்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri