தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையையும் விதிக்கவில்லை
கோவிட் தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையையும் விதிக்கவில்லை என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சும் இந்த விடயத்தை கடந்த வாரம் கூறியிருந்தமையை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் பல்வேறு பிராந்தியங்களுக்கு கடந்த வாரமும் விநியோகங்கள் இடம்பெற்றதாக இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 64 மில்லியன் குப்பிகள் இலங்கை உட்பட்ட மொத்தம் 80 நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது கோவிட் தடுப்பூசிகளை இவ்வளவு பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan