அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு
சிறுவர்கள் தொடர்பில் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மற்றும் ஒரு தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சிறுவர் நல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் "தோலுக்கு தோல் " தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்ற முன்னைய சர்ச்சைக்குரிய உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில நாட்களில் இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
10 வயது சிறுவனை உடலுறவு கொள்ள வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டையை, அலகாபாத் மேல் நீதிமன்றம் குறைத்துள்ள தீர்ப்பே, சிறுவர் நல ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் குறித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 10வருட சிறைத்தண்டனையை விதித்தது.
எனினும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த நிலையில் அவருக்கான தண்டனை 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர்களின் முக்கிய இடமாக இந்தியா உள்ளது.
2007 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில், 12,300 சிறுவர்களில் 53% க்கும் அதிகமானோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
சிறுமிகள் மட்டுமே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, சிறுவர்களும் சமமாக ஆபத்தில் உள்ளனர் - சிலவேளைகளில் 53% சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
