பாலியல் வன்கொடுமையில் ”தோலுக்கு தோல் தொடா்பு இல்லை” - சா்ச்சைக்குாிய தீர்ப்பை ரத்துச்செய்த இந்திய உயா்நீதிமன்றம்
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் "தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இல்லை" எனக் கூறி அவரை பிணையில் செல்ல அனுமதித்த சர்ச்சைக்குரிய மேல் நீதிமன்ற உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மும்பை மேல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இது ஒரு "ஆபத்தான முன்னுதாரணத்தை" அமைக்கும் என்று கூறி அதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்தநிலையில் இன்று இந்தியாவின் உயர் நீதிமன்றம் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், நீதிமன்றங்கள் பாலியல் நோக்கத்தைப் பார்க்க வேண்டுமே ஒழிய, தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை பாா்க்கக்கூடாது என்று தொிவித்துள்ளது.
எனவே குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இந்திய உயா்நீதிமன்றம் சிறைத்தண்டணையை வழங்கியுள்ளது.
2016 டிசம்பரில், 39 வயதான ஒருவர் 12 வயதான தமது மகளை வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று தாய் ஒருவா் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே இந்த தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
