இந்திய வம்சாவளியின் மனு தொடர்பில் மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
திருச்சியில் உள்ள கோட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒருவர், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு சென்னை மேல் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
உரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாறிய
தமக்கு நிவாரணம் கோரி ஆர். தியாகவிஜயன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தியாகவிஜயன் தனது மனுவில், தான் இந்திய வம்சாவளி தமிழ் பெற்றோருக்கு மகனாக இலங்கையில் பிறந்ததாகக் கூறியுள்ளார்.
தமது முன்னோர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். 1948 ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாறிய 9.75 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களில் தமது குடும்பமும் அடங்கும்.
1983 ஆம் ஆண்டு இனப் போரின் போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவிற்கு ஒரு வழி பாஸ்போர்ட்டைப் பெற்று, 1983 அக்டோபர் 23 அன்று செல்லுபடியாகும் விசா மூலம் ராமேஸ்வரத்தை அடைந்தனர்.
நாடு திரும்பியவர்களாக அங்கீகரித்து
தலைமன்னாருக்கான தங்களின் தொடருந்து டிக்கெட்டுகளும் பாஸ்போர்ட்டும், தாங்கள் 'திரும்பி வந்தவர்கள்' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், ராமேஸ்வரத்தை அடைந்ததும் தாங்கள் அகதிகளாக தவறாக அடையாளம் காணப்பட்டு கோட்டப்பட்டு முகாமுக்கு மாற்றப்பட்டனர்
அங்கு தாங்கள் இன்றுவரை அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று தியாகவிஜயன் கூறியுள்ளார்.

2020 ஜூலை 20 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த உண்மைகளை விபரித்து, இந்திய குடியுரிமை வழங்கக் கோரியபோதும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தங்களை நாடு திரும்பியவர்களாக அங்கீகரித்து தங்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |